தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்க்கெட் டல்லடித்தது. கடந்த 2 ஆண்டில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், என 2 படங்கள் மட்டுமே அவர் நடித்திருந்தார். தற்போது நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷ்ய பாய்பிரண்டுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

அதை ஸ்ரேயாவும் அவரது தாயாரும் மறுத்தனர். ஸ்ரேயாவுக்கு திருமண ஏற்பாடு செய்யவிலலை. உறவினர் திருமணத்துக்கு செல்வதால் புதிய ஆடைகள், நகைகள் வாங்கியதாக ஸ்ரேயா தாயார் தெரிவித்தார். ஆனாலும் ஸ்ரேயாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஸ்ரேயா தரப்பு மறுப்பை ஏற்க மறுத்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,’ஸ்ரேயா எனக்கு நல்ல நண்பர். அவர், ‘திருமணம்பற்றி வரும் மறுப்பை நான் நம்பவில்லை. வரும் மார்ச் மாதம்வரை பொறுத்திருங்கள், உண்மை தெரியவரும்’ என்கிறார். ஸ்ரேயா தற்போது நடித்து வரும் படங்களின் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதாலேயே திருமண தகவலை மறுத்து வருவதாகவும், விரைவில் எதிர்பார்க்காத அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

 

By admin