டிகர் கமல்ஹாசன் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று காதல் சர்ச்சையால் பரபரப்பு ஏற்படுத்தியவர்கள் ஓவியா, ஆரவ். இருவரும் அந்த நிகழ்ச்சியில் நெருக்கமாக பழகினார்கள். ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் ஆரவ் நட்பாகத்தான் பழகினேன். காதலிக்கவில்லை என்று மறுத்தார்.

இதனால் ஓவியா மனம் உடைந்த நிலையில் அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தியது. போலீசார் ‘பிக்பாஸ்’ அரங்குக்குள் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது. ஓவியாவுக்கு மனநல மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் ஓவியா தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறினார். அப்போதும் ஆரவ்வை மறக்க முடியவில்லை. அவரை காதலிக்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் சென்றார். தற்போது ஓவியா மீண்டும் சினிமாவுக்கு திரும்பி உள்ளார். ராகவா லாரன்சுடன் காஞ்சனா-3 படத்தில் நடிக்கிறார். விமல் ஜோடியாக களவாணி-2 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆரவ்வும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஓவியாவும் ஆரவ்வும் நெருக்கமாக இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தை ஆரவ்வும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். காதலிக்கிறார்களா? இல்லையா என்பதை இருவரும் உறுதிபடுத்தவில்லை.

By admin